தமிழக வறட்சியை போக்குமா வானம்! அடுத்த 5 நாட்களுக்கு மழை ! ஜமாய்....

செவ்வாய், 25 ஜூன் 2019 (19:00 IST)
நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கூறினார். அந்தக் காலத்தில் அதாவது மன்னர் ஆட்சிக் காலத்தில் ஆறு, குளம், குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்களை பொறுப்புடன் பேணிக்காத்தனர். ஆனால் அடுத்து வந்த அரசியல்வாதிகள் நீர் தேங்கும் குளம், குட்டைகளை எல்லாம் விற்று காசாக்கிவிட்டதாக  பலரும் கூறினர்.
அதனால் தற்போது நாம் தண்ணீருக்காக பல கஷ்டக்களை அனுபவித்துவருகிறோம். தமிழ்நாடு தொடர்ச்சியாக வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.தென் மேற்கு பருவ மழையும் பொய்துவிட்டதால் மக்கள் மிகவும் கவலையுற்றிருந்தனர். இந்நிலையில் மக்களின் கவலை கண்ணோக்கிய வானம் தன் மழைத்துளிகளை மண்ணுக்கு ஈந்து பரிசளித்துள்ளது. நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
 
இந்நிலையில் தற்பொழுது வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது ;
 
வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்