இந்த அமைதியின் காரணமாக, அவரது அரசியல் எண்ட்ரி குறித்து கேள்வி எழுப்பியவர்களின் வாயை, அரசியலுக்கு வரப்போவது உறுதி. எல்லாம் தயார் நிலையில் உள்ளது. அம்பு எய்ய வேண்டியது மட்டுமே பாக்கி என கூறி அடைத்துவிட்டார் ரஜினி. இது நடந்து கிட்டதட்ட பல மாதங்கள் ஆகிவிட்டது.
இதனிடையே சமீபத்தில் ரஜினிகாந்த், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு அரசியல் ஆலோசகராக திகழ்ந்து வெற்றிபெற செய்த பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து ரஜினி டிசம்பர் மாதம் தனது கட்சியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் அரசியல் குறித்து கேள்வி எழுப்பிய போது எந்த பதிலையும் அளிக்காமல் கடந்து சென்றார். ஆனால், தர்பார் படம் சிறப்பாக வந்துள்ளது என்பதை மட்டும் தெரிவித்தார். அரசியல் பேசாத ரஜினி, சினிமா பேசுகிறார். அரசியல் குறித்து எப்போதுதான் பேசுவார்? இல்ல இல்ல அரசியல் குறித்து பேசுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினி மக்களுக்காக அரசியல் பேசுகிறாரோ இல்லயோ தனது படங்களுக்காக அரசியல் பேசுகிறார் என்ர பேச்சும் உள்ளது. அதிலும் டிசம்பரில் கட்சி அறிவிப்பு, பிரசாந்த் கிஷோர் சந்திப்பு எல்லாம் தர்பாருக்காக எனவும் கூறப்படுகிறது.