தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்கள் மற்றும் உட்சபட்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் திரையுலகில் முடிசூடா சக்ரவர்த்திகளாக வலம் வந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பைப் போன்றே அவர்களின் சாதனைகளும் மிக நீளமானது.
தற்போது திரைத்துறையிலிருந்து இருவரும் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். ஆனால் ரஜினியை முந்திக்கொண்டு கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து கஜா புயலால் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று தன் கட்சியினருடன் இணைந்து செயலாற்றி மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதனால் அவர் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள். மேலும் இனிதான் நடிக்கப்போவதில்லை; ’இந்தியன் 2’ தான் எனது கடைசி படம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு தயாரிப்பாளரிடம் நிகழ்ச்சி நெறியாளர் : ’ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியலில் இருந்து ஓய்வு பெரும் நேரம் வந்து விட்டதா ..?’என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குக் பதிலளித்த தயாரிப்பாளர் : ’ரஜினி, கமல் ஆகிய இருவரும் தாமாகவே விலகினால் மிகப்பெரும் மரியாதை கிடைக்கும். தற்போது கமல் விலகி விட்டார்.ஆனால் ரஜினி தான் அரசியல் கட்சி ஆரம்பிக்க காலம் தாழ்த்தி வருவதாகவும் ‘ தெரிவித்தார்.