பாஜக ஆட்சியில் அங்கம் வகிக்குமா திமுக?

செவ்வாய், 21 மே 2019 (09:03 IST)
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்குமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், '23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன் என பதில் அளித்தார். இந்த பதில் காங்கிரஸ் கூட்டணி தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ள்து
 
உண்மையில் 'மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்காது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே அங்கம் வகிப்போம் என்று ஸ்டாலின் பதில் அளித்திருத்த வேண்டும். ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன் என அவர் அளித்துள்ள பதில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
 
ஏற்கனவே பாஜகவுடன் திமுக பேசி வருகிறது என தமிழிசை செளந்திரராஜன் கூறிய குற்றச்சாட்டை இந்த பதில் நிரூபிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கருத்து கூறி வருகின்றனர்
 
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில் ஒரே கூட்டணியில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இருக்க வாய்ப்பே இல்லை. எனினும் திமுக தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க திமுகவின் தயவு தேவைப்பட்டால் அதிமுகவை கழட்டிவிட்டுவிட்டு திமுகவுடன் கைகோர்க்க பாஜக தயங்காது என்றும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் ஒருசில நிபந்தனைகளுடன் பாஜக அரசு அமைய திமுக ஆதரவு கொடுக்கவும் தயங்காது என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்