ஜெயம்கொண்டம் அருகே கணவரின் உடல் அடக்கத்திற்கு பணம் இல்லாமல் தவித்த மனைவி

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (15:47 IST)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (40). இவர் துரைராஜ் (50) என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால் இரு வீட்டாரும் இவர்களது திருமணத்தை ஏற்கவில்லை. எனவே துரைராஜ் தம்பதி சிந்தாமணி பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். இருவரும் தினமும் கூலி வேலைக்கும் சென்றனர்.  இவர்களுக்கு தமிழரசன் என்ற மகனும், தமிழரசி, தமிழ்ச்செல்வி ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.


 


இந்நிலையில் துரைராஜூக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து உடல் நிலை மோசமானதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த கணவரின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் ராணி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் அழுது கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ. ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்து போன துரைராஜ் உடலை பார்வையிட்டு நாளை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். சிகிச்சைக்கா வந்தவர்களும் தங்களால் ஆன உதவிகளை ராணிக்கு அளித்தனர்.

இறந்த கணவரின் உடல் அடக்கத்திற்கு கூட பணம் இல்லாமல் அழுத ராணியை கண்டு பலரும் வருந்திச் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்