தேர்தலில் போட்டியிடாமல் எம்பி ஆகும் சரத்குமார்? கசிந்த தகவல்

செவ்வாய், 26 மார்ச் 2019 (19:27 IST)
கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்த பின்னர் ஒரு கூட்டணியில் ஒரு கட்சி இணைந்துள்ளது என்றால் உலகிலேயே அது சரத்குமார் கட்சியாகத்தான் இருக்கும். இருப்பினும் ஆதாயம் இல்லாமல் ஆதரவு கொடுக்க மாட்டார் அல்லவா? அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தரும் சரத்குமாருக்கு ராஜ்யசபா எம்பி பதவி தருவதாக அதிமுக தரப்பு வாக்கு கொடுத்துள்ளதாம். எனவே தேர்தலில் போட்டியிடாமல் சரத்குமார் விரைவில் எம்பி ஆகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய்காந்த் கட்சியுடன் கூட்டணி, தினகரன் கட்சியுடன் கூட்டணி என பேச்சுவார்த்தை நடத்தி வந்த சரத்குமார், ஒரு கட்டத்தில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்தார். ஆனால் சரத்குமார் போட்டியிட்டால் அது அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்பட்டதால் அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் சரத்குமாரை அழைத்து பேசினாராம்.
 
உங்கள் கட்சியை அதிமுகவுடன் இணைத்துவிடுங்கள், தேர்தலுக்கு பின் ராஜ்யசபா எம்பி பதவி தருகிறோம் என்ற டீலிங் வைக்கப்பட்டதாம். அதனை ஏற்றுக்கொண்ட சரத்குமார் உடனடியாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என்று தெரிவித்ததோடு பாஜக உள்ளிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துவிட்டாராம்
 
குறிப்பாக தூத்துகுடி தொகுதியில் கனிமொழியை தோற்கடிக்க சபதமேற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கனிமொழி தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்