இலங்கையை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ஏன்? அமைச்சர் விளக்கம்!

புதன், 10 பிப்ரவரி 2021 (18:04 IST)
இலங்கை நேபாளம் நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்தது ஏன் என்பது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் 
 
இலங்கை போன்ற சிறிய நாடுகளில் பெட்ரோலின் தேவை குறைவாக இருக்கும் அதுமட்டுமின்றி பொருளாதாரத்தில் குறைவான வளர்ச்சி கொண்ட நாடுகளுடன் பொருளாதாரத்தில் பெரிய நாடுகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது
 
பெரிய நாடுகளில் பெட்ரோல் தேவை அதிகம் என்பதால் விலையும் அதிகமாக இருக்கும் எனவே தான் இலங்கை நேபாளம் ஆகிய சிறிய நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது
 
மேலும் இலங்கை மற்றும் நேபாளத்தை விட கெரோசின் விலை இந்தியாவில் தான் மிகவும் குறைவாக உள்ளது. கெரோசின் விலை நேபாளத்தில் 59 ரூபாயும் வங்கதேசத்தில் 57 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. ஆனால் இந்தியாவில் 32 ரூபாய் தான். இதனை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் குறிப்பிட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்