ஸ்டெர்லைட்டை மூடியதால் தூத்துக்குடியில் மழை! வேகமாக பரவும் செய்தி

சனி, 14 ஏப்ரல் 2018 (22:29 IST)
தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதேபோல் இரவிலும் புழுக்கமாக இருப்பதால் குழந்தைகளும் முதியோர்களும் பெரும் தவிப்பில் உள்ளனர்.
 
இந்த நிலையில் தூத்துக்குடியில் மட்டும் இரவில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் அந்த பகுதி மக்கள் சந்தோஷத்தில் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக மூடியதால் தான் தூத்துக்குடியில் மழை பொழிவதாக ஒரு செய்தி அந்த பகுதி மக்களிடையே பரவி வருகிறது. இவ்வளவு நாட்களும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கிளம்பும் நச்சுப்புகையால்தான் மழை பெய்யவில்லை என்றும், தற்போது இந்த ஆலையை மூடியவுடன் கனமழை பெய்வதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால் உண்மையில் குமரிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையே இந்த மழைக்கு காரணம் என்றும், ஸ்டெர்லைட் மூடப்பட்டதற்கும் கனமழைக்கும் சம்பந்தமில்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்