கமல் பிரச்சனையை திமுக கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

வெள்ளி, 17 மே 2019 (08:15 IST)
கமல்ஹாசன் பேசிய இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு கண்டனம் மற்றும் ஆதரவு கருத்துக்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக இந்த பிரச்சனையை இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. கமல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தோ, ஆதரவு தெரிவித்தோ அல்லது அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தோ திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுகவினர் யாரும் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மெளனமாக உள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
எந்த பிரச்சனை என்றாலும் உடனடியாக கருத்து தெரிவிக்கும் திமுக, இந்த விஷயத்தில் மெளனம் காப்பது ஆச்சரியமாக இருப்பதாக டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்பட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கமலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தும் திமுக மெளனமாக இருப்பது தேர்தல் அரசியலின் ஒரு ராஜதந்திரமே என்றும் கமலுக்கு ஆதரவாக பேசினாலும் எதிர்ப்பு தெரிவித்து பேசினாலும் அது தேர்தலில் அவருக்கு சாதகமான ஒரு முடிவை ஏற்படுத்தும் என்பதால் திமுக தலைவர்கள் அமைதியாக இருப்பதாகவும், மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் முடிந்தவுடன் திமுக தரப்பில் இருந்து இதுகுறித்து கருத்துக்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு யாரும் ரியாக்ட் செய்ய வேண்டாம் என திமுக மேலிடத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு வந்திருப்பதாகவும் இதனால் தான் கமல்ஹாசன் கருத்துக்கு எந்தவித ரியாக்சனும் இன்றி திமுகவினர் மெளனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்