ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம்: ஓபிஎஸ், தீபா அதிர்ச்சியா?

புதன், 15 மார்ச் 2017 (07:24 IST)
ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சசிகலா அணியின் சார்பில் அந்த கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு குடும்பத்தின் கையில் அதிமுக சென்று கொண்டிருக்கின்றது என்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாதம் இதனால் ஏற்படும் என்பதால் டிடிவி தினகரன் பின்வாங்கியதாக தெரிகிறது.




இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட ஒருசில பெயர்கள் ஆர்.கே.நகர் வேட்பாளராக பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது சுதா விஜயகுமார் தேர்வு செய்யப்படலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் எம்.ஜிஆரின் வளர்ப்பு மகன் விஜயனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆரின் மருமகளை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தினால் ஓபிஎஸ் மற்றும் தீபா விமர்சனம் செய்யப்படுவார் என்றும் இதனால் இருவரும் அதிர்ச்சி அடைவார்கள் என்றும் பெங்களூரில் உள்ள சசிகலாவின் எண்ணமாக இருக்கின்றதாம். ஆனால் ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் மனதில் என்ன இருக்கின்றது என்பதை தேர்தல் முடிவு தான் சரியாக கூற முடியும்

வெப்துனியாவைப் படிக்கவும்