இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா என்ற கேள்வி கேட்கும் திரு.ஸ்டாலின் அவர்களே…. ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
காவி என்பது தியாகத்தின் வண்ணம் என குறிப்பிட்டுள்ள அவர், நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி என்று கூறியுள்ளார். அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டள்ளார்.