மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பதில் என்ன முடிவு? உயர்நீதிமன்றம் கேள்வி

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (13:19 IST)
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தவறுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மெரினா உள்பட சென்னையில் உள்ள எந்த கடற்கரையிலும் இன்னும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை
 
இந்த நிலையில் மெரினா உள்பட கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பதற்கு எப்போது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
இது குறித்த பொது நல வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மெரினாவில் பொதுமக்களை இன்னும் ஏன் அனுமதிக்கவில்லை? எனவும், தமிழக அரசு பொது மக்களை கடற்கரைகளில் அனுமதிப்பது எப்போது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது
 
மெரீனாவில் பொதுமக்களை எப்போது அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு தான். எனவே  அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்களின் நலன் கருதியும் மெரினாவின் வியாபாரிகளின் நலன் கருதியும் மெரினாவில் பொது மக்களை அனுமதிப்பது எப்போது என்பது குறித்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது என்பது குறித்த விவரங்களை வரும் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்