ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு? – சீமான் சரமாரி கேள்வி!

செவ்வாய், 17 அக்டோபர் 2023 (08:44 IST)
அகமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த போது பலரும் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது குறித்து சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.



உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடந்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் நடந்த போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த நிலையில் மைதானத்தில் ஜெய்ஸ்ரீ ராம் பாடல் ஒலிபரப்பப்பட்டதும், பலரும் ஜெய்ஸ்ரீ ராம் என கோஷமிட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியபோது பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “இவர்கள் வணங்கும் கடவுளை இன்னும் கழிவறைக்குள் மட்டும்தான் கொண்டு செல்லவில்லை. கிரிக்கெட்டிற்கும், ராமருக்கும் என்ன சம்பந்தம்? கிரிக்கெட் மைதானத்தில் எதற்கு ஜெய் ஸ்ரீ ராம். ஆண்டாண்டு காலமாக நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷும், தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கையும் இவர்களுக்கு நட்பு நாடுகள். ஆனால் இந்தியாவின் சுதந்திரத்தில் நமது தோளோடு தோள் நின்று போராடிய பாகிஸ்தானும், பங்களாதேஷும் நமது எதிரிகள் என்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்