தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்..! புதிய அமெரிக்க நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

Senthil Velan

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (09:46 IST)
புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
 
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,   வளர்ச்சி மிகுந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்று தெரிவித்தார். 
 
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது என்றும் மனித வளங்கள் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார். 

நவீன உள்கட்டமைப்பு திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார் என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்,  தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலம் தமிழ்நாடு என்று கூறினார்.  மேலும் இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் 2ஆவது மிகப்பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.


ALSO READ: கனமழை எதிரொலி.! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.!!
 
இந்தியா, அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவு எழுச்சி கண்டுள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன என்றும் புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வர வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்