குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்ததால் ஐயப்ப பக்தர்கள் ஆனந்த குளியல்

சனி, 24 டிசம்பர் 2022 (18:00 IST)
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்துள்ளதால் குற்றால அருவியில் தண்ணீர் குறைந்து விழுந்து வருகிறது. இதனால் தென்காசி வழியாக குற்றாலம் செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் செய்து விட்டு சென்று வருகின்றனர்.
 
 குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய ஐந்து அருவிகளிலும் தண்ணீர் சீராக உள்ளதாகவும் இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது.
 
இன்று காலை முதல் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டது என்றும் நாளை இன்னும் அதிகமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குற்றாலத்தில் சுற்றுலா வரும் பொதுமக்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருவதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்