சாலையோரம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை மாநகராட்சி

வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (17:45 IST)
சென்னை மாநகராட்சியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சாலையோரம் கேட்பாரற்றுக் கிடக்கும் வாகங்கள், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அப்புறப்படுத்த  மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

பெருநகரக சென்னை மாநகராட்சியில், நீண்ட நாட்களாகக் கேட்பாரற்றுக் கிடக்கின்ற வாகனங்களை அப்புறபடுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

அதில், சாலையோரம், நடைபாதை மற்றும் தெருக்களில்   நிறுத்தி வைக்கப்பட்ட பழுதடைந்த வானகங்கள், சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக  கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளவற்றை அகற்றவும், இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கவும் முடிவெடிக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டு  உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலத்தில் விடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்