மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை.. 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதட்டம்..!

சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:10 IST)
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை வெடித்து வரும் நிலையில் தற்போது தான் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வந்ததாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ளதாகவும் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்னுபூர் என்ற மாவட்டத்தில் மெய்த்தி என்ற சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பதட்டம் காணப்படுகிறது. 
 
இந்த கலவரத்தில் குக்கி என மக்களின் வீடுகள் தீவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த கலவரத்தை தொடர்ந்து குக்கி இன மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தெரிகிறது. 
 
மணிப்பூரில் உடனடியாக அமைதியை கொண்டுவர மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்