சட்டசபையில் கடும் அமளி - ரகசிய வாக்கெடுப்பு நிராகரிப்பு

சனி, 18 பிப்ரவரி 2017 (11:25 IST)
தமிழக முதல்வராக தேந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க, தற்போது தமிழக சட்டசபை கூடியுள்ளது.


 

 
சட்டசபை கூடியதும், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்மொழிந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என ஓ.பி.எஸ் அணியினர் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கோஷமிட்டு வருகின்றனர். எனவே, சட்டசபையில் கடுமையான அமளி ஏற்பட்டுள்ளது.
 
ஆனால், சபாநாயகர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பெரும்பாலும் வெளிப்படையான வாக்கெடுப்பே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...

வெப்துனியாவைப் படிக்கவும்