சமீபகாலமாகவே தமிழக அரசு மற்றும் ஊழலுக்கு எதிராக கமல்ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும், இளைஞர்களுகு மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.
அதோடு, ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை கமல்ஹாசன் நிரப்புவார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், நான் விரைவில் அரசியலுக்கு வருவேன் கமல்ஹாசன் தற்போது வெளிப்படையாகவே பேசி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் “அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல்! அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.