காதல் படத்தில் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு தேடும் நபராக நடித்து ரசிகர்களிடையே பிரபலமான பாபு, பெற்றோரை இழந்து, சென்னை சூளை பகுதியில் ஆதரவற்று கோவிலில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தார். இதைக் கேள்விப்பட்ட ஸ்டண்ட் நடிகர் தீனா மற்றும் இயக்குனர் மோகன் ஆகியோர் அவரை அங்கிருந்து மீட்டு வந்து, அவருக்கு தங்குவதற்கு இடம், உடை, உணவு மற்றும் செல்போன் ஆகிய வசதிகளை செய்து கொடுத்தனர். மேலும், சினிமாவில் அவர் அடுத்த இடத்திற்கு செல்ல உறுதுணையாக நாங்கள் இருப்போம் என கூறினர்.
இந்நிலையில், மது பழக்கத்திற்கு ஏற்கனவே அடிமையாக இருந்த அவரால், குடிக்காமல் இருக்க முடியவில்லை என்பதை தெரிந்து கொண்ட அவர்கள், பாபுவை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரு மாத காலம் சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது.