நாளடைவில் ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து அதிகமாகி வரும் நிலையில் கரூர் நகரில் அதுவும் பேருந்துநிலையம் ரவுண்டானா அருகே, கரூரிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய மாநகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு என்று வரைமுறை இல்லாமல், பேருந்து நிலையம் ரவுண்டானா முதல் கோவை சாலை வழியாக, ஏராளமான ஆம்னி பேருந்துகள் கட்டுக்கடங்காமல் நிற்பதால், கரூர் மாநகரத்திற்கு வந்து செல்லும் மற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தேங்குகின்றன. இது மட்டுமில்லாமல் கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளும் இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பதால் ஆம்னி பேருந்துகள் நிறுத்த தனியாக ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்றும், போக்குவரத்து போலீசார் அதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.