சென்னையில் விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்டர்: பெரும் பரபரப்பு

செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (20:39 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது தாதாக்கள், ரெளடிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் சற்றும் முன் சென்னை கொரட்டூரில் விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
 
விழுப்புரம் தாதா மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில் மணிகண்டன் கொரட்டூரில் பதுங்கி இருப்பதாக போலீசார்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும் இதனையடுத்து மணிகண்டனை கைது செய்ய விழுப்புரம் போலீசார் முற்பட்ட போது மணிகண்டன் தாக்க முயற்சித்ததாகவும் இதனையடுத்து பதிலுக்கு விழுப்புரம் தனிப்படையினரை தாக்கியதை தொடர்ந்து தாதா மணிகண்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
ஏற்கனவே தாதா மணிகண்டனின் தம்பி ஆறுமுகம் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு மூன்று பேர் கொலை செய்த நிலையில் தற்போது தாதா மணிகண்டனும் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்ற மொழிக்கேற்ப மணிகண்டனும் அவருடைய சகோதரரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்