விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

Senthil Velan

திங்கள், 24 ஜூன் 2024 (15:58 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
 
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடை பெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13-ம் தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது.
 
இத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
 
திமுகவை வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோர் உட்பட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. மேலும் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

ALSO READ: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.! தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மனு..!
 
கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்