டேய் பீட்டா: போராட்டத்தில் வெலுத்து வாங்கிய விஜயகாந்த்!!

திங்கள், 9 ஜனவரி 2017 (16:45 IST)
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக போராட்டம் நடத்தியது. 


 
 
மதுரை அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இதில், மத்திய, மாநில அரசுகள் தமிழர் உணர்வை கேவலப்படுத்தக் கூடாது. காலங்காலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கூடாது என்று விஜயகாந்த் கோஷமிட்டார்.
 
மேலும், தமிழகத்தில் காளையை தடை செய்வது போல, கேரளாவில் யானையையும், ராஜஸ்தானில் ஒட்டகத்தையும் தடை செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார். போராட்டத்தின் உச்சகட்டமாக பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். 

நன்றி:நியூஸ் 7

வெப்துனியாவைப் படிக்கவும்