செவுலிலேயே ஒன்னு விடுங்க... திமுகவை சீண்டிய திமிரெடுத்த விஜய பிரபாகரன்!

திங்கள், 16 செப்டம்பர் 2019 (11:54 IST)
இனி கேப்டன் பற்றி அவதூறு பரப்பினால் செவிட்டில் விடுங்கள் என பொதுமேடையில்  விஜய பிரபாகரன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். விஜய பிரபாகரன் பொதுமேடையில் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அவர் பெசியது பின்வருமாறு, என்னை இங்கு யாரும் விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள். உங்கள் சகோதரனாக பாருங்கள். எனக்கு தேமுதிக கட்சியின் எந்த பதவியும் வழங்கவில்லை. நான் விஜயகாந்தின் மகன் என்பதையே பெரிய பொறுப்பாக கருதுகிறேன். 
தேமுதிக எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த கட்சி. இக்கட்சி வெட்ட வெட்ட வளரும். திமுகவினர் தேமுதிகவை பார்த்து காப்பி அடிக்கிறார்கள். தேமுதிகவில் அதிக இளைஞர்கள் உள்ளார்கள். ஆனால், வயதான திமுக கட்சிக்கு எதற்கு இளைஞர்கள் சேர்க்கை என புரியவில்லை.
 
என்னை சிலர் உதயநிதி ஸ்டாலினுடன் ஒப்பிடுகிறார்கள். என்னையும் உதயநிதி ஸ்டாலினையும் கம்பேர் செய்ய வேண்டாம். அவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கு. நான் அப்படி இல்லை. நான் ஒரு இளைஞன். 
கேப்டன் வருவாரா கேப்டன் வருவாரா என பலர் கேட்டார்கள். இப்போது அவர் இங்கு சிங்கம் போல வந்து அமர்ந்துள்ளார். தேமுதிக தொண்டன் எனும் திமிரில் சொல்கிறேன். இனி கேப்டன் பற்றி அவதூறு பரப்பினால் செவிட்டில் விடுங்கள். கேப்டன் லேசாக கண்ணை மூடியுள்ளார். அவர் கண்ணை திறந்தால் அனைத்து பயலும் காலி என பேசியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்