விஜயகாந்த் திமுக கூட்டணியில் சேராதது இரட்டிப்பு மகிழ்ச்சி: தமிழிசை

வெள்ளி, 11 மார்ச் 2016 (11:39 IST)
தமிழக சட்டசபை தேர்தலை தனித்து நின்று சந்திப்போம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


 
 
பாரதீய ஜனதா கட்சி தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், தனித்து போட்டியிடுவோம் என்று விஜயகாந்த் அறிவித்தது அவர்களின் விருப்பம். அதே சமயத்தில் ஒரு விதத்தில் வரவேற்கத்தக்கது. ஏனென்றால் அவர்கள் ஊழல் கட்சிகளின் சாயல் இல்லாமல் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
எங்கள் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்திருந்தால் மகிழ்ந்து இருப்போம். அதே வேளையில் திமுக கூட்டணியில் இணைவார்கள் என்ற யூகங்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு ஊழல் கூட்டணிகளில் சேராமல் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.
 
தனித்தனியாக நின்று அவரவர் பலங்களை நிரூபிப்பது ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையே. கூட்டணி அமைக்க வேண்டும் என்று நினைத்தது வாக்குகள் பிரிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, மேலும் இந்த தேர்தல் பல சவால்களை சந்திக்க இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை.

வெப்துனியாவைப் படிக்கவும்