காஞ்சி மட பீடாதிபதியாக பொறுப்பேற்கும் விஜயேந்திரா்!

வெள்ளி, 2 மார்ச் 2018 (18:15 IST)
காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதி சங்கராச்சாரியார் மரணமடைந்த நிலையில், 70 வது பீடாதிபதியாக விஜயேந்திரர் ஓரிரு நாட்களில் பொறுப்பேற்க உள்ளார். 
 
சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காஞ்சி சங்கர மடத்தின் இதிகளின் படி பீடாதிபதி இறந்தவுடன் அடுத்த பீடாதிபதியை 48 மணி நேரத்திற்குள் அறிவிக்க வேண்டும். எனவே, அடுத்த பீடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்க உள்ளார். 
 
மடத்தின் இளைய பீடாதிபதியாக இருந்த விஜயேந்திரர் காஞ்சி மடத்தின் அடுத்த பீடாதிபதி என்பது உறுதி செய்யப்பட்டது. சங்கரநாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட விஜயேந்திரா், திருவள்ளூா் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் பிறந்தவா். 
 
இவா் 14 வது வயதில் சங்கரமடத்தில் இணைந்து கொண்டார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளா் சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரா் கைது செய்யப்பட்டு பின்னா் விடுதலை செய்யப்பட்வர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்