நூல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறுக - விஜயகாந்த்

சனி, 2 ஏப்ரல் 2022 (12:35 IST)
நூல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

 
பின்னலாடைகளின் மூலப் பொருளான நூலின் விலை அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் நூல் விலை 150 ரூபாய் வரை உயர்ந்து சுமார் 350 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுபோன்ற சூழலில் நூலின் மேலும் 30 ரூபாய் அதிகரித்திருப்பது ஏற்றுமதியாளர்களை கவலை அடைய வைத்துள்ளது. 
 
இந்நிலையில் நூல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரும் மையமாக சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நகரமாக திருப்பூர் விளங்குகிறது. பின்னலாடை தொழிலை முடக்கும் வகையில் முக்கிய மூலப் பொருளான நூலின் விலை அண்மைக்காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என கோரியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்