அப்போது அவர் பேசுகையில், “சட்டசபையில் தேமுதிகவிற்கு இறங்கு முகம் என்று அம்மா சொன்னார். அது பலித்தது. விஜயகாந்துக்கு டெபாசிட் போனதற்கு காரணம் அம்மாதான். அப்போதே, திமுகவிற்கும் அம்மா சாபம் விட்டிருந்தால் திமுகவுக்கும் டெபாசிட் போயிருக்கும்.
விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்று விட்டோம், இனி நாங்கள்தான் என்று திமுகவினர் சொல்கிறார்கள். அதிமுக ஆளும் கட்சி என்பதை மறந்து விட்டு இப்படி பேசுகிறார்கள். திமுக எம்எல்ஏவால் ஒரு ரேசன் கார்டு வாங்கித் தர முடியுமா? முதியோர் பென்சன் வாங்கி கொடுக்க முடியுமா?” என்று கூறியுள்ளார்.
அப்படியென்றால், எதிர்கட்சி செய்ய நினைத்தாலும், ஆளுங்கட்சியினர் செய்யவிடமாட்டார்களா என்று கூட்டத்தின் இடையே சலசலப்பு எழுந்தது.