பீனிக்ஸ் பறவை விஜயகாந்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆரம்பம்: புலி பதுங்குறது பாயுறதுக்கா?

திங்கள், 13 ஜூன் 2016 (12:41 IST)
சட்டசபை தேர்தலில் தேமுதிக மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து படுதோல்வியடைந்தது. இதனையடுத்து ஒரு மாத காலம் ஊடகங்களை சந்திக்காத தேமுதிக தலைமை, தோல்வியடைந்த வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியபின்னர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜயகாந்த் பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவேன் என்றார்.


 
 
தேர்தல் தோல்வி குறித்து வேட்பாளர்களுடன் விஜயகாந்த் நடத்திய ஆலோசனையில் பலரும் தேர்தல் கூட்டணியால் தோல்வியடைந்தோம் எனவும், திமுக உடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும் எனவும் கூறினர்.
 
இதனையடுத்து பீனிக்ஸ் பறவையை போல் மீண்டும் எழுச்சி பெறுவோம் என பேசிய விஜயகாந்த் தற்போது உள்ளாட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளார். இதில் ஊராட்சி, ஒன்றிய, பகுதி, வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.
 
ஜூன் 20-ஆம் தேதி வரை இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாகவும், தேர்தலில் ஏன் தோற்றோம், என்னை செய்திருக்க வேண்டும், என்ன செய்ய தவறினோம் எனவும், மேலும் உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்த யுக்திகளும விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
 
இந்த ஆலோசனை முடிந்த பின்னர் தேமுதிகவின் உள்ளாட்சி தேர்தல் நிலைப்பாடு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் மக்கள் நல கூட்டணியுடன் உள்ளட்சி தேர்தலை சந்திப்பாரா அல்லது பீனிக்ஸ் பறவையாக எழுச்சி கண்டு தனியாக தேர்தலை சந்திப்பாரா என்பது இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் தெரிய வரும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்