ஜெயலலிதா சமாதி என்பது புத்தருக்கு ஞானோதயம் கொடுத்த போதிமரமா?: விஜயகாந்த் கிண்டல்!

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (13:54 IST)
உடல் நலக்குறைவால் தமிழக அரசியலில் தீவிரமாக செயல்படாமல் அவ்வப்போது வந்துபோகும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் வலம் வர ஆரம்பித்துள்ளார்.


 
 
கடந்த சட்டசபை தேர்தலின் போதே விஜயகாந்த் உடல்நலம் குன்றியிருந்தார். கடந்த தேர்தலின் போது அவரது செல்வாக்கு குறைய அவரது உடல்நலமும் முக்கிய காரணம். அதன் பின்னரும் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலையை தேற்றி வரும் விஜயகாந்த் மீண்டும் தனது தீவிர அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். கதிராமங்கலம் மக்களை சந்தித்து அவர்களது போராட்டத்துக்கும் ஆதரவு அளித்தார்.
 
இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரஜினி, கமல் இவர்கள் இருவரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என உறுதிபட தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ்ஸையும் கடுமையாக விமர்சித்தார்.
 
தமிழக அரசு நிர்வாகம் மோசமடைந்து வருகிறது. பதவியை காத்துக்கொள்ளவதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக உள்ளனர். ஓபிஎஸ் ஏதோ முனிவர் போல பேசுகிறார். ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ஓபிஎஸ் உறுதிமொழி எல்லாம் எடுத்திருக்கிறார். ஜெயலலிதா சமாதி என்பது புத்தருக்கு ஞானோதயம் கொடுத்த போதிமரமா? என பேசியுள்ளார் விஜயகாந்த்.

வெப்துனியாவைப் படிக்கவும்