ஜல்லிக்கட்டு இல்லை என்றால் வாழ முடியாதா? - விஜயதாரணி திமிர் பேச்சு

புதன், 18 ஜனவரி 2017 (16:24 IST)
தற்போது ஜல்லிக்கட்டிற்காக போராடும் இளைஞர்கள், ரூபாய் நோட்டு செல்லாது என பாஜக அரசு அறிவித்த போதும், விவசாயிகள் மரணம் அடைந்த போதும் ஏன் போராடவில்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், கோவை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 
 
இந்நிலையில் இது தொடர்பான ஒரு விவாத நிகழ்ச்சி ஒன்றை ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தியது. அதில் கலந்து கொண்டு விஜயதாரணி பேசிய போது “ இப்போது ஜல்லிக்கட்டிற்காக போராடும் இளைஞர்கள், ரூபாய் நோட்டு சொல்லாது மோடி அறிவித்த போது எங்கே போனார்கள்? மோடி அறிவிப்பால் வயதானவர்கள் ஏராளமானோர் இறந்து போனார்கள். அதேபோல், சமீபத்தில் விவசாயிகள் பலர் இறந்து போனார்கள். அப்போது இவர்கள் ஏன் போராடவில்லை?. தற்போது ஏதோ, ஜல்லிக்கட்டு இல்லையென்றால் உயிர் போய்விடும் என்கிற மாதிரி இவர்கள் போராடுகிறார்கள்” என பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்