கரூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் கட்டுமானப்பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்றார்.
சுமார் 1 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் 6 திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற அப்பகுதி வாழ் மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடும், அந்த திட்டத்தினால் தற்போது வேலை இல்லாமல் இருப்பது குறித்தும் தெரிவித்து அமைச்சரை முற்றுகையிட முயன்றனர்.அப்போது கண்டிப்பாக செய்து தருகின்றேன் என்று கூறியதோடு., எங்கம்மா காவிரி ஆற்றில் தற்போது, சுமார் ஆயிரம் அடி போர் போட்டுதான் குடிநீர் வருகிறது, கண்டிப்பாக மழைவரும் என்றார்.
ஒரு சிலர் இவர் எப்போது மழை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் ஆனார் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் ஒய்வு பெற்றதையடுத்து, தற்போது., பாலகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகின்றார். அவர் கொடுக்கும் வானிலை ஆய்வு மைய ரிசல்ட் விட இவர் கூறுவதாவது நிறைவேறினால் பரவாயில்லை என்று தமாஷ் அமைச்சர் பேச்சைக் கேட்டு சிரித்த படி மக்கள் சென்றனர்.