பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஜனவரி 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும் சென்னையில் இருந்து 14000 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
ஆந்திரா செல்லும் பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், புதுச்சேரி, ஈ.சி.ஆர். வழியாகச் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்தும். வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களுக்குப் பூந்தமல்லியில் இருந்தும், பிற மாவட்டங்களுக்குக் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.