தீயாய் இறங்கு வேலை பார்க்கும் நிர்வாகிகள்! – மகிழ்ச்சியில் விஜய் எழுதிய கடிதம்!

சனி, 1 ஜூலை 2023 (10:31 IST)
நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.



நாளுக்கு நாள் நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதற்கேற்றார்போல மெல்ல மெல்ல அரசியல் நோக்கிய தனது நகர்வுகளை விஜய் எடுத்து வைக்க தொடங்கியுள்ளார். அதன் முன்னோட்டமாகதான் தொகுதி வாரியாக நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியரை அழைத்து பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.

இதுதவிர விஜய்யின் பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அன்னதானம், ரத்த தான முகாம் மற்றும் பல மக்கள் நல உதவிகளை செய்தனர். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து நடிகர் விஜய் தன் கைப்படவே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தனது பிறந்தநாள் அன்று நிர்வாகிகள் செய்த நலத்திட்ட உதவிகள் குறித்து அறிந்ததாகவும், நிர்வாகிகளின் செயல்பாடுகளை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.



Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்