முதல் நாளே சொதப்பல்!.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அல்வா!. பிரச்சாரம் பண்ணாமல் பனையூருக்கு பறந்த விஜய்!...

Mahendran

திங்கள், 30 மார்ச் 2026 (19:10 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.. இன்று காலை பெரம்பூரில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் வந்து அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பின் அவர் இன்று 4 இடங்களில் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் முதலாவதாக தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு சென்று பரப்புரை செய்தார் விஜய். அதன்பின் திமுக தலைவர் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பரப்பரை செய்யப் போனார் விஜய்.. ஆனால் செல்லும் வழியில் ஏராளமான மக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, அசம்பாவித்த்தை தவிர்க்க 2 நிமிஷம் மட்டும் பேசிவிட்டு செல்லும்படி போலீசார் கூறினர்கள். ஆனால், அப்போது மைக்கும் வேலை செய்யவில்லை என்பதால் பரப்புரை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கு சில மீட்டர் தூரத்திற்கு முன்பே விஜய் இரண்டு நிமிடம் மட்டும் பேசி விட்டு சென்று விட்டார்..

மேலும் வில்லிவாக்கம் சிட்கோ நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய இரண்டு இடங்களிலும் விஜய் பரப்பரை செய்ய செல்லவில்லை. வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுக்கிறார். எனவே அந்த தொகுதியில் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருக்காக பொதுமக்களும், தவெகவினரும் கூடியிருந்த நிலையில் விஜய் அதையும், அண்ணா நகர் பரப்புரையையும் கேன்சல் செய்துவிட்டு பனையூருக்கு சென்று விட்டார்..

ஒருபக்கம் விஜய் பரப்பறையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக சிடி நிர்மல் குமார் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியிருக்கிறார். வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் பகுதிக்கு விஜய் வராததால் நான்கு மணி நேரமாக காத்திருந்த தவெகவினரும், ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்