அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!.. கொளத்தூரில் வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன விஜய்..

Mahendran

திங்கள், 30 மார்ச் 2026 (16:03 IST)
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. விஜய் அடிப்படையில் ஒரு பிரபலமான நடிகர் என்பதால் அவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருப்பதாலும், குறிப்பாக பெண்களின் ஆதரவு இருப்பதாலும் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை விஜய் வாங்குவார் என கணிக்கப்படுகிறது.
நேற்று 234 தொகுதிக்குமான வேட்பாளர்களை விஜய் அறிவித்தார்.. அதில் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்..

மேலும் தனது தேர்தல் பிரச்சாரத்தை பெரம்பலூரில் இன்று துவங்கினார் விஜய்.  பெரம்பலூரில் பேசியபோது ‘திமுக எனும் தீய சக்திக்கு முடிவு கட்ட வேண்டும்.. திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. பெண்கள் கழிப்பறைக்கு செல்ல கூட முடியவில்லை.. அங்கே கொலை செய்கிறார்கள்.  டீக்கடையில் கூட வைத்து கொலை செய்கிறார்கள்.. இதற்கெல்லாம் திமுக அரசின் அலட்சியம்தான் காரணம்.. முதல்வர் ஸ்டாலின் சாருக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.. குடும்பத்தோடு சேர்ந்து எப்படி கொள்ளையடிப்பது என்பதுதான் அவரின் நோக்கம்’ என்று பேசினார்..

அதன்பின் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பேசிய விஜ ‘ திமுக ஒரு தீய சக்தி.. அதற்கு நீங்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்’ என்று பேசிக் கொண்டே இருந்தபோது வேட்பாளரின் பெயரை மாற்றி கூறினார்.

கொளத்தூர் தொகுதி வேட்பாளர் வி.எஸ்.பாபுவிற்கு பதில் மாதவரம் பேட்பாளர் பிரபு என கூறினார். அதோடு அவர் பேசிய மைக்கும் வேலை செய்யவில்லை. எனவே அவர் பேசுவது அங்கிருந்த மக்களுக்கு சரியாக கேட்கவில்லை.. இதையடுத்து விஜய் அங்கிருந்து கிளம்பி சென்றார். அநேகமாக வேட்பாளரை விஜய் மாற்றி சொன்ன வீடியோவை திமுகவினர் ட்ரோல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்