தூத்துக்குடிக்கு லேட்டா வந்ததுக்கு மன்னிச்சுடுங்க - பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய்

புதன், 6 ஜூன் 2018 (11:23 IST)
துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று நீண்ட நாட்களுக்கு பிறகு வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் என தூத்துக்குடி சென்ற விஜய் பாதிக்கப்பட்டவர்களிடம் கூறியுள்ளார்.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் தூத்துகுடிக்கு நேற்று  நள்ளிரவு சென்ற நடிகர் விஜய், தூத்துகுடி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து பலியானவர்களின் குடும்பத்தினர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் செய்தார்.
 
இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்டவர்கள், நடிகர் விஜய் நள்ளிரவில் தங்களது வீட்டிற்கு வந்து, சம்பவம் நடைபெற்று நீண்ட நாட்களுக்கு பிறகு வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் என்றும், நள்ளிரவில் வந்து உங்களை சிரமம் செய்ததை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் எனவும் கூறினார் என்றனர். மிகவும் எளிமையாக வந்த விஜய், குடும்பத்தில் உள்ள ஒருவர் போல் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு சென்றார் என்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்