கோயில் யானை வேதநாயகி உயிரிழப்பு - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி...
வெள்ளி, 29 நவம்பர் 2019 (19:53 IST)
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் யானை வேதநாயகி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இதற்கு பெருவாரியான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சங்கமேஸ்வரர் கோயில் யானை வேதநாயகி, சில வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களாக அது உணவும் அருந்தவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், வனத்துறையினர் சார்பில் வேதநாயகிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. அதனால், இன்று கோயில் நடை அடைக்கப்பட்டது.
வேதநாயகி இறந்தது குறித்து கேள்விப்பட்டு வந்த மக்கள் மற்றும் பக்கதர்கள் அதற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.