பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநரை சந்தித்தார் வெங்கய்யா நாயுடு!

திங்கள், 10 அக்டோபர் 2016 (10:34 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரிக்க சென்ற மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மருத்துவர்களிடம் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.


 
 
இந்த சூழலில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று காலை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார் வெங்கையா நாயுடு. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தி வரும் சூழலில் நடந்திருக்கும் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழகத்துக்கு பொறுப்பு, துணை முதல்வர் தேவையா என்பது குறித்து அதிமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
 
மேலும், ஆளுநர் வித்யாசாகர் ராவை நட்பு ரீதியாக சந்தித்து பேசியதாகவும் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்