இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அன்று மதன் தான் கங்கையில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு மாயமானார். வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் பாரிவேந்தர் மீதான தனது மரியாதையையும், சிலர் பரப்பிய அவதூறு காரணமாக அவர் மதனை புறக்கணிப்பதையும், பல கோடிகள் பாரிவேந்தருக்கு உதவி செய்ததையும் மதன் குறிப்பிட்டுள்ளார். இனியொரு ஜென்மமே வேண்டாம் என்று காசியில் சமாதியாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நீண்ட கடிதம் அவரால் எழுதப்பட்டதுதானே என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இந்த கடிதம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.