விஜய்யிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணங்கள் வெளிவந்துள்ளன. விஜய்யின் தாயான சங்கீதா தனது கணவரைப் பிரிந்து மகனோடு தனியாக வாழ்ந்து வருபவர். இதற்கு அவரது முறையற்ற காதல் உறவுகளேக் காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் பீடித் தொழிலாளி ரகுவோடு பழக ஆரம்பித்துள்ளார். இது ஊரில் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரிய விஜய்யின் காதுபடவே பலர் இதுபற்றி பேசியுள்ளனர். இதனால் கோபமான விஜய் தன் தாயையையும் எச்சரித்தும் அவர்கள் இருவரும் கேட்கவில்லை. இதனால் கோபமான விஜய் ரகுவை வெட்டிக் கொலை செய்துள்ளார்.