வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் மெயின் பஜார் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அங்கு நின்றிருந்த வாகனங்களை கூட அகற்றாமல் இரவோடு இரவாக அப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதை தொடர்ந்து இரவோடு இரவாக அங்கு போடப்பட்ட சாலை அகற்றப்பட்டதுடன், சாலை காண்ட்ராக்ட் எடுத்தவரின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சியின் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப்பை அப்புறப்படுத்தாமல் அதன் டயர்களை மூடும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.