‘பானை’ சின்னம் கொடுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு

Mahendran

வியாழன், 28 மார்ச் 2024 (11:36 IST)
மக்களவைத் தேர்தலில் ‘பானை’ சின்னத்தை விசிகவுக்கு  தேர்தல் ஆணையம் ஒதுக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கிடைத்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மட்டும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைக்காமல் உள்ளது

குறிப்பாக மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பானை சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தேர்தலை ஆணையத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து விடுதலை சேர்த்துக் கட்சியின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணையின் முடிவில் பானை சின்னம் குறித்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்