கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன்.. கவிஞர் வைரமுத்து பெருமிதம்..!

Mahendran

திங்கள், 26 பிப்ரவரி 2024 (10:03 IST)
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று மீண்டும் திறக்கப்பட இருக்கும் நிலையில் இந்த நினைவிடத்திற்கு நேற்று இரவு சென்ற கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:


கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன்

கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு

இது தந்தைக்குத்
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்

"இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்"

கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்

உலகத் தரம்

நன்றி தளபதி

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்