சிட்டுக் குருவிகளே சிறகடித்து வாருங்கள்: பள்ளிகள் திறப்பு குறித்து வைரமுத்து டுவிட்!

திங்கள், 1 நவம்பர் 2021 (10:10 IST)
சிட்டுக்குருவிகளே சிறகடித்து வாருங்கள் என இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்
 
600 நாட்களுக்குப் பின்னர் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பள்ளி மாணவர்களை வரவேற்க சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்  உள்பட பலரும் பள்ளி வாசலில் நின்று வந்தனர் என்பதும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை வரவேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுவதை அடுத்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
திறந்தன பள்ளிகள்
சிட்டுக் குருவிகளே
சிறகடித்து வாருங்கள்
 
ஆசிரியர்களே!
பிள்ளைகளுக்குப் பெற்றோராகுங்கள்
 
பெற்றோர்கள்
ஆசான்களாகுங்கள்
 
ஆணிகள் அறையாதீர்கள்
முற்றாத மூளைகளில்
 
அறிவு பின்பு;
அன்பு முன்பு
 
இடைவெளியின் வெற்றிடத்தை
இதயத்தால் நிரப்புங்கள்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்