2ஜி ஊழல் தொடர்பாக, 2011ஆம் ஆண்டு, சாதிக்பாட்ஷாவிடம் சிபிஐ விசாரணை செய்து வந்தது. அந்நிலையில், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு கொடுத்த நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அப்போது கூறப்பட்டது.
அதில், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஷ்குமார், மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோர் சேர்ந்து சாதிக்பாட்ஷாவை கொலை செய்தாகக் கூறியுள்ளார். தற்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், ரகசியத்தை வெளியிட்டதாகவும் கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டே திருச்சியை சேர்ந்த பிரபாகரன், அரியலூரில் என்னை சந்தித்து இதுபற்றி கூறினார். அவர் கூறியது அனைத்தும் உண்மைதான். கொலையை தற்கொலை என்று நாடகம் ஆடுகிறார்கள். இதில் காவல்துறை உயர் அதிகாரி ஜாபர்சேட்டிற்கு இதில் கண்டிப்பாக தொடர்புள்ளது. எனவே இதுபற்றி சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளியே வரும்” என்று வைகோ கூறினார்.