டிசம்பர் 30 வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

சனி, 12 நவம்பர் 2016 (15:17 IST)
தமிழகத்தில் வங்கிகள் விடுமுறையின்றி செயல்படும் என்று ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் சகதத்துல்லா தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகத்தில் உள்ள வங்கிகள் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரை விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் சகதத்துல்லா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் வங்கிகளில் மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். ஏடிஎம் மையங்களும் முடங்கியதால் வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது.
 
இதுகுறித்து வங்கி சார்பாக கூறியதாவது:-
 
பொதுமக்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகளிலும் 100 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுபாடு ஏற்படுவதால்தான் தனிநபர் ஒருவருக்கு ரூ.4000 வரை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
 
இதனால் தான் ஏடிஎம்களிலும் பணம் தட்டுபாடு ஏற்பட்டு வருகிறது. அதற்கு ரிசர்வ் வங்கி சார்பாக 100 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு அதிக அளவில் வழங்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்