கரூரில் பிடிபட்ட குரங்கு முகம், கிளி மூக்குடன் கூடிய அதிசய பறவை

சி.ஆனந்தகுமார்

சனி, 13 பிப்ரவரி 2016 (17:25 IST)
கரூரில் குரங்கு முகத்துடன், கிளி மூக்குடன் கூடிய வெளி நாட்டு அதிசய  பறவை  பிடிபட்டது.


கரூரை  அடுத்த  மண்மங்கலம்  சமத்துவபுரம்  பகுதியில்  தோட்டத்தில் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து அங்கு  சென்று  இளைஞர்கள் பார்த்தபோது குரங்கு முகம்  போன்றும், கிளி மூக்கு போன்ற  மூக்குடன் அதிசய பறவை ஒன்று இருந்துள்ளது. அதனைக் கண்ட அப்பகுதியில்  சுற்றி திரியும்  நாய்கள்  துரத்தியுள்ளது.  அவற்றிடமிருந்து  பறவையை மீட்ட  இளைஞர்கள், தண்ணீர்,  பழங்கள்  கொடுத்து  காப்பாற்றி வருகின்றனர்.  இதனையடுத்து  வனத் துறையினருக்கு  தகவல்  அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.  மேலும்  தகவலறிந்து அங்கு வரும் பொதுமக்கள் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்