தனது தாத்தா கருணாநிதி முதல் தந்தை ஸ்டாலின் வரை குடும்பத்தில் பலரும் அரசியலில் இருந்தாலும், சினிமா தயாரிப்பு துறையில் நுழைந்து, பின் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டவர் உதயநிதி ஸ்டாலின்.
அந்நிலையில், இணையதளம் ஒன்றுக்கு அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “நான் ஏற்கனவே திமுகவி இருக்கிறேன். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே அரசியலில் ஈடுபட்டு வந்தேன். தேர்தலின் போது திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், முரசொலிமாறன் ஆகியோருக்காக வாக்குகள் சேகரித்துள்ளேன். ஆனால், சினிமாவில் நடிக்க தொடங்கிய பின் அரசியலை விட்டு விலகி இருந்தேன். இப்போது, பல நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வருகின்றனர். எனவே, நானும் தீவிர அரசியலுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டதாக உணர்கிறேன்” என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆலந்தூரில் நடைபெற்ற ஒரு திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் திமுக தொண்டர்கள் முன் உரையாற்றினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ நான் பிறந்ததிலிருந்தே அரசியலில்தான் இருக்கிறேன். திமுக வாய்ப்பு கொடுத்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன்” என அவர் தெரிவித்தார்.